சசிகலாவுக்கு சலுகைகள் அளித்த விவகாரம் - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பொன்னார்

Asianet News Tamil  
Published : Jul 19, 2017, 01:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
சசிகலாவுக்கு சலுகைகள் அளித்த விவகாரம் - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பொன்னார்

சுருக்கம்

Action want to be taken on officers in sasikala facilities case

பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் கொடுத்த சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு மணி மண்டபத்தைத் திறக்க பிரதமர் நரேந்திர மோடி 27 ஆம் தேதி தமிழகம் வருவதாக தெரிவித்தார்.

நடிகர் கமல் ஹாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறிய அமைச்சர் சி.வி. சண்முகம், கமல் மீது வன்முறையை செலுத்தியதாக கூறினார்.

பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுத்து காவல்துறை அதிகாரிகள் சட்டத்தை மீறியுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..