கமல்ஹாசனை கைவிடாத எம்ஜிஆர்... மீண்டும் டார்ச் லைட் சின்னம்? உற்சாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்..!

By vinoth kumarFirst Published Dec 19, 2020, 1:13 PM IST
Highlights

டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என  எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதையடுத்து கமல் கட்சிக்கு  மீண்டும் டார்ச்லைட் சின்னம்  ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என  எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதையடுத்து கமல் கட்சிக்கு  மீண்டும் டார்ச்லைட் சின்னம்  ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அடுத்து நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கும் இதே சின்னத்தை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கமல் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மட்டும் டார்ச் லைட் சின்னத்தை வழங்க மறுத்துள்ளது. புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அக்கட்சிக்கு மறுத்துள்ளது.

 மக்கள் நீதி மையம் கோரிய டார்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு  மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் ஒதுக்காததற்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீது ஆணையம் முறையீட்டை ஏற்றாலும் டார்ச் லைட் சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகம் எழுந்தது. மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் டார்ச் லைட் சின்னம் விவகாரத்தில் புதிய திருப்பமாக, டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அந்த சின்னத்தை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி அறிவித்துள்ளது. டார்ச் லைட் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் வழங்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி விண்ணப்பித்துள்ளது. இது குறித்து தெரிவித்த எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி, எம்ஜிஆரை நினைவுப்படுத்தும் ஒரு பொருளை சின்னமாக தராமல், டார்ச் லைட்டை சின்னமாக தந்தது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ளார். ஆகையால், மீண்டும் டார்ச்லைட் சின்னம் கமல் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் எம்ஜிஆர் பெயரை முன்னிறுத்தியே கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், அதிமுக தரப்பில் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்தாலும் தற்போது எம்ஜிஆர் மக்கள் கட்சியால் மீண்டும் கமலுக்கு டார்ச் லைட் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!