காவல் துறையினரை பாதுகாக்க டிஜிபி எடுத்த அதிரடி முடிவு.. சுழற்சி முறை விடுப்பை அதிகரித்து உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published May 24, 2021, 10:13 AM IST
Highlights

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் காவல்துறையினர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க சுழற்சி முறையில் அவர்களுக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து தமிழக காவல்துறைத் தலைவர்  திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் காவல்துறையினர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை தடுக்க சுழற்சி முறையில் அவர்களுக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து தமிழக காவல்துறைத் தலைவர்  திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகத் தீவிரமாக பரவி வருகிறது.  நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு அதிக உயிரிழப்பை சந்திக்கும் மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தமிழகத்தில் முன் களப்பணியாளர்களான காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பெருமளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 24 மணி நேரமும் சட்டம்-ஒழுங்கு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் காவல்துறையினர் இவரை 84 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து காவல்துறையினரை பாதுகாக்கும் வகையில் தமிழக காவல்துறை டிஜிபி முக்கிய முடிவு எடுத்துள்ளார்.

அதாவது சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து காவல் துறை தலைமை இயக்குநருக்கு தொடர்ந்து வேண்டுகோள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில்,  மண்டல ஐஜிக்கள், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது சுழற்சி முறையில் 20 சதவீத காவலர்களுக்கு விடுப்பு வழங்குமாறு அதில் அவர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 10 சதவீத காவலர்களுக்கு சுழற்சிமுறையில் விடுப்பு வழங்கபட்டு வரும் நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

click me!