நாட்டின் பிரதமர் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கையா.. அலறும் இசுலாமிய இயக்கம்.

By Ezhilarasan BabuFirst Published May 17, 2022, 3:03 PM IST
Highlights

உத்திரபிரதேச வாரணாசி ஞானவாபி மசூதியை மூட வேண்டும் என வாரணாசி நீிதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார். 

உத்திரபிரதேச வாரணாசி ஞானவாபி மசூதியை மூட வேண்டும் என வாரணாசி நீிதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

மசூதி பின்பக்க சுவற்றில் பெண் தெய்வ உருவம் இருப்பதாகவும் தினமும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என டில்லியை சேர்ந்த ஐந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர் இதை தொடர்ந்து ஞானவாபி மசூதியை கள ஆய்வு செய்ய வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவு போட்டது .. இந்த உத்தரவுக்கு தடை வாங்க மசூதி தரப்பு முயன்றும் உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது

இந்நிலையில்  16-05-2022 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்றம் நியமித்த கள ஆய்வு குழு பின்பக்க சுற்றுச் சுவரில் பெண் தெய்வ உருவம் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்கு பதிலாக மசூதி வளாகத்தில் உள்ள ஒலு என்கிற கை முகம் கால் கழுவும் நீர் தொட்டி நடுவில் அழகுக்காக வைத்துள்ள தண்ணீர் பீச்சும் அடிக்கும் நீர் தெளிப்பை சிவலிங்கம் என அவசர அவசரமாக வாரணாசி சிவில் நீதிமன்றம் அறிவித்தது.

இதனையடுத்து அந்த பகுதிக்குள் யாரும் நுழையக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாதுகாப்புக்கு அப்பகுதியில் ஏராளமான போலீசார் போட்டு உள்ளனர். சங்கர் ஜெயின் என்பவரின் மகன் விஷ்ணு ஜெயின் தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் சொல்ல சங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் இருந்ததை கண்டு பிடித்து விட்டனர் என நீதிபதிக்கு பொய் தகவல் கொடுத்த உடனே நீதிபதியும் ஏற்கனவே சொல்லி வைத்தது போல கள ஆய்வு குழு நீதிமன்றம் செல்வதற்கு முன்பே நீதிபதி தீர்ப்பு வழங்கி விட்டார் ..

முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்கள் ரஹீஸ் அன்சாரி குழு நீதிமன்றம் செல்வதற்கு முன்பே தீர்ப்பு வழங்கியது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை அதுவும் நாட்டின் பிரதமர் தொகுதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இது போன்ற சட்ட விரோத தீர்ப்புகள் என்பது படுபாதக செயல் ‌ நக்குகிற நாய்க்கு செக்கு என்று தெரியுமா சிவலிங்கம் என்று தெரியுமா என்கிற பழமொழிக்கு ஏற்ப நீர் தெளிப்பு தொட்டியை சிவலிங்கம் என சொல்வது அதை அவசர அவசரமாக மசூதியை இழுத்து மூட தீர்ப்பு வழங்குவதை எல்லாம் பார்த்தால் வழக்கு கள ஆய்வு எல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகமாக அம்பலமாகிறது.

1947 க்கு முன்பு வணக்க வழிபாட்டு தளங்கள் எப்படி இருந்ததோ அதே நிலை அனைத்து மத வணக்க வழிபாட்டு தளங்கள் தொடர வேண்டும் என 1991 ல் நிறைவேற்றிய சட்டம் என்ன ஆனது என்று நமக்கு கேள்வி எழுகிறது ‌இது நீதிமன்றம் மூலம் முஸ்லீம்களுக்கு எதிரான ஜனநாயக படுகொலை‌ பாபர் மசூதி கதை போல ஞானவாபி மசூதி கதை உருவாக்க கூடாது இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் ‌ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!