விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு  நிவாரணம்…. இந்தியாவிலேயே தமிழகத்தில் அறிமுகமாகும் புதிய திட்டம் !!

 
Published : Feb 09, 2018, 08:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு  நிவாரணம்…. இந்தியாவிலேயே தமிழகத்தில் அறிமுகமாகும் புதிய திட்டம் !!

சுருக்கம்

accident benefit fund for students

விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நிவாரணத் தொகை  வழங்கும் புதிய திட்டம் இந்தியாவிலே தமிழகத்தில் அமல்படுத்தப்ப ட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோட்டு புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட பொருட்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு  வருகின்றன.

இந்நிலையில்  தமிழகத்தில் விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நிவாரணத் தொகை  வழங்கும் புதிய திட்டம் இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  சென்னையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அவர்,
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படாத புதிய திட்டமாக விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறையை கொண்டு வர  முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்  தலைமையின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வி துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.



அதன்படி, பள்ளி மாணவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம், பெரிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும் என்றும், இந்த தொகை ‘இன்சூரன்ஸ் பாலிசி’ என்பதன் மூலம் வழங்கப்படுவது கிடையாது என்றும், இந்த தொகை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!