3 நாள் பிரச்சாரம்... ஏ.சி. சண்முகத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Jul 26, 2019, 10:20 AM IST
Highlights

வேலூர் தொகுதியில் ஒன்று அல்லது அதிகபட்சம் 2 நாட்கள் தான் முதலமைச்சர் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வேலூர் தொகுதியில் ஒன்று அல்லது அதிகபட்சம் 2 நாட்கள் தான் முதலமைச்சர் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மக்களவை தொகுதியான வேலூரில் தேர்தல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கட்சியினருமே தற்போது தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகியுள்ளனர். அமைச்சர்கள் களம் இறங்கியுள்ளதால் ஏசி சண்முகம் கேம்ப் மிகவும் உற்சாகத்தில் வேலை செய்து வருகின்றனர். 

இதேபோல் திமுக தரப்பிலும் முன்னாள் அமைச்சர்கள் தற்போது தான் வேலூரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் திமுக தரப்பும் தேர்தல் பணிகளில் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் 6 இடங்களில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 அதன்படி வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். முதலில் இரண்டு நாட்களில் ஆறு இடங்களையும் கவர் செய்வது போல் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொகுதி சண்முகத்திற்கு சாதகமாக இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலால் எடப்பாடி தனது பிரச்சாரத்தை ஒரு நாள் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள். 

மேலும், ஏசி சண்முகம் தரப்பிலும் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தடல் புடல் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதனால் ஆளும் கட்சியினர் இயல்பாகவே வேலூரில் பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் 2 நாட்கள் வேலூரில் தங்க திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதன் மூலம் கடைசி நேரத்தில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வெற்றி வாகை சூடலாம் என்று ஏசி சண்முகம் தரப்பு உற்சாகத்தில் உள்ளது. 

இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஒரே ஒரு கூட்டத்திற்கு அழைத்து வந்துவிடலாம் என்றும் ஏசி சண்முகம் கணக்கு போடுகிறார். ராமதாசும் கூட ஏசி சண்முகத்திற்காக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!