"சசிகலா பொது செயலாளராக நீடிக்கக் கூடாது" : உச்சநீதிமன்றத்தில் மனு

Asianet News Tamil  
Published : Jul 20, 2017, 03:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
"சசிகலா பொது செயலாளராக நீடிக்கக் கூடாது" : உச்சநீதிமன்றத்தில் மனு

சுருக்கம்

aam aadmy party appeal in supreme court

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா, அதிமுக பொது செயலாளராக நீடிக்கத் தடை விதிக்கக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டை பெற்று வருகிறார். 

நான்கு வருட காலம் தண்டனை விதிக்கப்பட்டு சிசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அதிமுகவின் பொது செயலாளராக  இருந்து வருகிறார். துணை பொது செயலாளராக டிடிவி தினகரன் இருந்து வருகிறார்.

அதிமுக அம்மா அணியில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, அந்த அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், சிறையில் சசிகலாவைச் சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

அதேபோல், துணை பொது செயலாளர் டிடிவி தினகரனும், சசிகலாவின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அதிமுக பொது செயலாளராக சசிகலா நீடிக்கத் தடைக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சசிகலாவின் அறிவுறுத்தலின்படி, தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் செயல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் கூறியுள்ளார். 

குடியரசு தலைவர் வேட்பாளரை ஆதரிக்க, சசிகலாவுடன் ஆலோசித்ததாக கூறும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, அதிமுக பொது செயலாளராக நீடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வசீகரன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!