“தமிழ் மக்களுக்கு இந்த தியாகம் செய்கிறேன்...” எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்... கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!

Asianet News Tamil  
Published : Apr 04, 2018, 05:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
“தமிழ் மக்களுக்கு இந்த தியாகம் செய்கிறேன்...” எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்... கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை!

சுருக்கம்

A young man Suicide Cauvery Management Board issues

தண்ணியே கூடுக்காதவர் என் தமிழ்நாட்டுக்கு வாரார். அவர் வருவதை வன்மையாக கண்டித்து நான் எலி மருந்து சாப்பிட்டு உள்ளேன். தமிழ் மக்களுக்கு என் உயிர் தியாகம் செய்கிறேன் என கடிதம் எழுதிவைத்துவிட்டு பிரபு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி எலி மருந்து சாப்பிட்ட பிரபு என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். காவிரி மேலாண்மை அமைக்கக்கோரி கடந்த 31ம் தேதி பிரபு என்ற இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார். பின்பு அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு என்பவர் கடந்த 31ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்போது சேலம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பிரபு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டிய தமிழக சட்டபேரவை எதிக்கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தெரிவித்திருந்தார், அவர் தமிழகம் வருவதை கண்டித்து  எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபு கொடுத்த வாக்குமுலத்தில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை அதனை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இதற்கு முடிவு எடுத்தார். அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை, இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது ஏப்ரல் மாதம் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வாராராம். தண்ணியே கூடுக்காதவர் என் தமிழ்நாட்டுக்கு வாரார். அவர் வருவதை வன்மையாக கண்டித்து நான் எலி மருந்து சாப்பிட்டு உள்ளேன். தமிழ் மக்களுக்கு என் உயிர் தியாகம், இதற்காவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு நான் பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். என் மக்களை வாழ வையுங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள், தமிழக அரசுக்கு துரோகம் செய்யாதிர்கள் என பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார்.   
 

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவில் படுக்கையறைக்குள் புகுந்த அமெரிக்க ராணுவம்... பதறிய மதுரோவின் மனைவி..! பரபர சம்பவம்
பிரிந்து சென்றவர்கள் இணைந்தால் தான் அதிமுக வெற்றி பெறும் - அடித்து கூறும் ஓபிஎஸ்