மொத்தம் 12 கோடி தடுப்பூசி தேவை.. 2 கோடி மட்டும்தான் வந்திருக்கு.. அமைச்சர் அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2021, 12:09 PM IST
Highlights

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரயில் நிலையங்களிலும் என்னமாதிரியான பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகிறது என்பது குறித்து நாளை ஆய்வு செய்யப்பட இருப்பதாக கூறினார். தற்போதைக்கு தமிழகத்தில் 11 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், 

தமிழகத்துக்கு மொத்தம் 12 கோடி தடுப்பூசிகள் தேவை என்ற நிலையில் தற்போது வரை வெறும் இரண்டு கோடி தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது எனவும், இன்னும் 9 கோடி தடுப்பூசிகள் நமக்கு கிடைக்க வேண்டுமெனவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மைய மருத்துவமனைக்கு தனது ஒரு மாத சம்பளத்தைத்து அவர் வழங்கினார். தமிழகம் முழுவதும்  கட்டுக்குள் வரத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம்காட்டி வருகிறது. 

இந்நிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மைய மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான அறுவை சிகிச்சை உபகரணமான ஹெபாஃபில்ட்டரை சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மருத்துவமனை சாதாரண சுகாதார மையமாக இருந்து தற்போது அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவே மாறியுள்ளது. இதை மேலும் நவீன படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக எனது அடுத்த ஒரு மாத சம்பளத்தை இந்த மருத்துவமனைக்கு வழங்குகிறேன் என்றார். அப்போது அருகில் இருந்த தி நகர் நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்தார்.  தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர்  மா.சுப்ரமணியன்.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரயில் நிலையங்களிலும் என்னமாதிரியான பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகிறது என்பது குறித்து நாளை ஆய்வு செய்யப்பட இருப்பதாக கூறினார். தற்போதைக்கு தமிழகத்தில் 11 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், அடுத்த மூன்று தினங்களுக்குள் அது மக்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறினார். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது, ஆனால் தற்போது வரை நமக்கு கிடைத்திருப்பது 2 கோடிதான், மேலும் 9 கோடி தடுப்பூசிகள் நமக்குக் கிடைக்க வேண்டும் என அவர் கூறினார். ஆனால் இந்த மாதம் இறுதிக்குள் 79 லட்சம்  தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு வழங்குவதாக கூறி உள்ளது, அது கிடைத்தால் 3 கோடி என்ற அளவை எட்டுவோர் என கூறினார். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 60 லட்சம் பேர் 2 டேஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாகவும் அவர் கூறினார். 

அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டுவதற்கு அமைக்கப்பட்ட மையங்களில் மின் விசிறி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை என கூறிய அவர், விரைவில் உரிய அமைச்சரிடம் அதுகுறித்து எடுத்துக்கூறி சீரமைக்கப்படும் என தெரிவித்தார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார். 
 

click me!