வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ.ராசா தயாரா? என்னுடைய சொந்த செலவில் ஏற்பாடு செய்கிறேன்.. அமைச்சர் ஜெயக்குமார்

By vinoth kumarFirst Published Dec 9, 2020, 6:50 PM IST
Highlights

 2ஜி வழக்கு  பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆ.ராசா விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ.ராசா தயார் என்றால்  நான் என்னுடைய சொந்த செலவில் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என்றார். 

அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி , எம்ஜிஆரை இரவல் வாங்க கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்ியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;-  ராஜா ஒரு வழக்கறிஞர். அவர் சட்டம் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கலாம். அவர் எப்படிபட்ட வழக்கறிஞர் என்று எனக்கு தெரியாது. ஆனால் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இவரே தீர்ப்பு எழுதிய மாதிரி அவரின் கருத்து உள்ளது. வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது, வழக்கின் முடிவு என்ன ? அதனை  பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல, தவறு செய்தவன் ஜெயிலுக்கு செல்ல வேண்டும், தண்டனை பெற்றாக வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை என்றால் கூட பேசலாம்.  தற்போது மேல்முறையீட்டில் இருக்கும் வழக்கில் விரைவில் கம்பி எண்ணுகின்ற சூழலில் அவரே இன்று தீர்ப்பு எழுதியதை போல செய்தியாளர்களை அழைத்து, தான் நல்லவர் என்று பேசினால் ஏற்கக் கூடியதா ? என கேள்வி எழுப்பினார். அம்மா வழக்கை இவர் கோடிட்டு காட்டுகின்றார். உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது இறந்தவர்கள் பற்றி நாம் எந்த நிலையிலும் பேசக் கூடாது, அது பண்பாடு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் திமுகவிற்கு பண்பாடு கிடையாதா ? ராஜாவிற்கு பண்பாடு கிடையாதா ? அவர் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அம்மாவின் வழக்கு முடிவு பெற்றுவிட்டது.

மேலும், 2ஜி வழக்கு  பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆ.ராசா விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கறிஞர் ஜோதியுடன் விவாதிக்க ஆ.ராசா தயார் என்றால்  நான் என்னுடைய சொந்த செலவில் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என்றார். எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்த அதிமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என கூறியுள்ளார்.

click me!