கைப்பை முழுவதும் கட்டுக்கட்டாக பணம்..! ஏடிஎம் மையத்தில் சிக்கிய வாலிபர்..!

Published : Mar 06, 2019, 07:16 PM ISTUpdated : Mar 06, 2019, 07:19 PM IST
கைப்பை முழுவதும் கட்டுக்கட்டாக பணம்..! ஏடிஎம் மையத்தில் சிக்கிய வாலிபர்..!

சுருக்கம்

சென்னை அண்ணா சாலையில் ஏடிஎம் மையம் ஒன்றில் அதிக அளவிலான பணத்தை செலுத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார் 

சென்னை அண்ணா சாலையில் ஏடிஎம் மையம் ஒன்றில் அதிக அளவிலான பணத்தை செலுத்திய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார் 

இவரிடமிருந்து ரூ.17.8 லட்சம் பணம் சிக்கியது. மவுண்ட் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்றில் வட மாநில இளைஞர் ஒருவர் தொடர்ந்து அடுத்தடுத்து பணம் செலுத்தி வந்துள்ளார்.

பலரும் ஒருவர் பின் ஒருவராக காத்திருந்த நிலையில், அந்த இடத்தை விட்டு நகராமல் பலகணக்குகளில் பணத்தை செலுத்தி உள்ளார்.இது குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் தடுமாறி பதில் கூறி உள்ளார். அவர் பேசுவதில் பல சொற்கள் புரியாத நிலையில், அவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று உள்ளது போலீஸ்.பின்னர் அவரிடம் மீதம் இருந்த ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது 

விசாரணை  நடத்தியதில் அவர் பெயர் ரத்தர் சாகிப் என்பதும், சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் என்பதையும் தெரியவந்துள்ளது. மேலும்  இவருக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது..? எதற்காக பல்வேறு வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளார் என்ற கோணத்தில் இவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!