நிர்மலாதேவி பெயரில் வலைதளங்களில் வைரலாகிவரும் பரபரப்பு ஆடியோ...

Published : Jul 10, 2019, 10:35 AM IST
நிர்மலாதேவி பெயரில் வலைதளங்களில் வைரலாகிவரும் பரபரப்பு ஆடியோ...

சுருக்கம்

கோர்ட்டுக்கு ஆஜராகி வந்த சமயத்தில்  பேராசிரியை நிர்மலா தேவி சாமியாடி குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அவர் தனக்கு மனநிலை சரியில்லை என்று பேசியிருப்பதாக ஒரு ஆடியோ வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோர்ட்டுக்கு ஆஜராகி வந்த சமயத்தில்  பேராசிரியை நிர்மலா தேவி சாமியாடி குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் அவர் தனக்கு மனநிலை சரியில்லை என்று பேசியிருப்பதாக ஒரு ஆடியோ வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து கொண்டு அங்கிருந்து செல்ல மறுத்தார். கண்ணை மூடி தியானம் செய்வது போல் அமர்ந்து, தன் மீது புகார் கொடுத்தவர்கள் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், தன்னை சாமிதான் காப்பாற்றியது என்றும் ஏதேதோ கூறினார். கோர்ட்டு ஊழியர்கள் அவரை வெளியேறுமாறு கூறியும் அவர் செல்ல மறுத்து கண்ணை மூடிக்கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.இறுதியில் போலீசார் கைது செய்ய வருவதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தனது சாமியாட்டத்தை முடித்துக்கொண்டார்.

பின்னர் அருப்புக்கோட்டைக்குச் சென்ற அவர் தனது வீட்டுக்குச் செல்லாமல் அங்குள்ள பள்ளிவாசலுக்குள் தலைவிரி கோலத்துடன் திடீரென நுழைந்து அங்கும் ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றி வீட்டுக்கு கொண்டு போய் விட்டனர்.

மேற்படி சம்பவங்களே நிர்மலா தேவியின் நிலைமை குறித்து பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்றுமுதல் அவர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி மேலும் மேலும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

அவர் பேசியதாகச் சொல்லப்பட்ட அந்த ஆடியோவில்,...நான் கோபமாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் கொஞ்ச நாளாக நான் நானாகவே இல்லை. அது ஆன்மீக ரீதியாக நடந்ததா என்று தெரிய வில்லை.2 நாட்களுக்கு முன்புதான் தஞ்சையில் மன நல மருத்துவரிடம் சென்றேன். இப்போ தினமும் ஒவ்வொரு கூத்தாக நடந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நல்ல மனநல மருத்துவரிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். நெல்லையாக இருந்தாலும் சரி, மதுரையாக இருந்தாலும் சரி, தயவு செய்து உடனே அழைத்துச் செல்லுங்கள்.

தினமும் பெரிய, பெரிய பிரச்சினையாக வருகிறது. இப்போதே தயாராக இருக்கிறேன். உடனே பேசிவிட்டு சொல்லுங்கள். நான் எப்போதும் அந்த மாதிரி நடந்து கொண்டதே கிடையாது. மனநெருக்கடியால் தினமும் நான் மோசமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். உடனே பேசிவிட்டுச் சொல்லுங்கள், டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்கு நான் தயாராக இருக்கிறன்’...என்று  நிர்மலாதேவி பேசுவதாக உரையாடல் உள்ளது. அதற்கு எதிர்முனையில் பேசியவர், நான் நெல்லையில் ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறார்.

நிர்மலாதேவி மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறாரா? அதன் காரணமாகத்தான் கோர்ட்டு வளாகத்திலும், பள்ளிவாசலிலும் நேற்று முன்தினம் அவ்வாறு நடந்து கொண்டாரா? தற்போது வெளியாகி இருக்கும் ஆடியோ அவருடையதுதானா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. நிர்மலா தேவி என்ற பெயருக்குப்பின்னால் நிற்கும் கேள்விக்குறிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!