கொரோனாவுக்கு வெளிநாடு செல்லாத தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் பலி., அமைச்சர் விஜய்பாஸ்கர் அறிவிப்பு..!!

By Thiraviaraj RMFirst Published Mar 25, 2020, 8:58 AM IST
Highlights

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள நபருக்கு முதன் முதலில் அந்த நோய் தாக்கி முதல் நபராக உயிரிழந்திருக்கிறார்.இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

T.Balamurukan

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள நபருக்கு முதன் முதலில் அந்த நோய் தாக்கி முதல் நபராக உயிரிழந்திருக்கிறார்.இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தினார்.

வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று வராமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் ஆவார். இவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும்  நுரையீரல் தொடர்பான நீண்டகால நோய் பிரச்னைகள் மிகவும் தீவிரமாக இருந்து வந்ததாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

click me!