அ.ம.மு.க. ஒரு பொறம்போக்கு கட்சி! அங்கே இருந்து ரெண்டு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்: சொன்னது யார்?

By Vishnu PriyaFirst Published Nov 13, 2019, 6:32 PM IST
Highlights

பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போன்ற அ.ம.மு.க.வில் இரண்டாண்டுகளாக இருந்துவிட்டேன் அந்தக் கட்சியில், உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. தினகரனை நம்பிச் சென்றவர்கள், தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சியில் உள்ளோர், ஆபாச படம் எடுப்போர்.

*    ரஜினியை இழுத்துத்தான் தமிழத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை எங்களுக்கு. அவர் அவரது வேலையை பார்க்கிறார், நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். ஊடகங்கள்தான் அவருக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாக தெளிவாக சொல்லிவிட்டார். எனவே அவர் மீது விமர்சனங்களை வைக்க பா.ஜ.க. விரும்பவில்லை. 
-    நாராயணன் (பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்)

*    உள்ளாட்சித் தேர்தலில் சீட் வாங்கித் தருகிறேன்! என்று ஆசை காட்டித்தான் அ.ம.மு.க.வினரை மீண்டும் அ.தி.மு.க.வுக்கு இழுக்கப் பார்க்கிறார் புகழேந்தி. புழுவுக்கு ஆசைப்பட்டு போக்கும் மீன்களின் கதிதான் தினகரனை விட்டு போகும் நபர்களுக்கு ஏற்படும். புகழேந்திக்கு பழனியப்பன் மீதுதான் கடுப்பு. அதனால்தான் இப்படி கட்சியை பறாண்டிக் கொண்டிருக்கிறார். 
-    அ.ம.மு.க. நிர்வாகிகள்.

*    எக்காரணம் கொண்டும் திருவள்ளுவர் சிலையை கம்பிக்குள் வைப்பது கூடாது. அவர் ஒரு மதத்தையோ, ஒரு ஜாதியையோ சேர்ந்தவர் அல்ல. தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்படும் அவரை கம்பிக்குள் வைத்து பாதுகாப்பது என்பது, நாளை கோயில் சிலைகளையும் கம்பிக்குள் வைத்துப் பாதுகாக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும். 
-    பூவை ஜெகன் (புதிய பாரதம் தலைவர்)

*    விக்கிரவாண்டியில் ஒரே நாளில் பிரசாரம் செய்த கேப்டன், கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளார். இதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து மாநகராட்சிகளிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். ஆகவே திருச்சி, மதுரை, திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளை நாம் அ.தி.மு.க.விடம் கேட்டுப் பெற்றாக வேண்டும். 
-    பிரேமலதா 

*    நல்ல படமெடுப்பதும், படையெடுப்பதும் ஒரே முயற்சிதான். அற்புதமான கதையாக ‘தம்பி’ பட கதையை நான் உருவாக்கி வைத்திருந்தாலும், அதனைப் படமாக கொண்டு வருவதற்குள் நான் படாத பாடு பட்டேன். அந்த நேரத்தில்தான் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து எனக்கு ‘ஈழத்துக்கு வாருங்கள்’ என்று அழைப்பு வந்தது. தமிழ்ச்செல்வன் தான் பேசினார். 
-    சீமான். 

*    கோஷ்டி பூசல் இல்லாத அரசியல் கட்சியை பார்ப்பது அரிது. காந்திக்கு, சுபாஷ் சந்திரபோஸ் இருந்தது போல, நேருவுக்கு எதிராகவும் கோஷ்டி பூசல் இருந்தது. அதே நேரத்தில் கோஷ்டி பூசல், பகையாக மாறக்கூடாது. 
-    துரைமுருகன். 

*    சமீபத்தில் நடந்த கட்சியின் ஆய்வுக்கூட்டத்தில், ‘சர்வாதியாக மாறுவேன்’ என்றேன். அது வெறும் பேச்சுக்காக அல்ல. நாளடைவில், நிச்சயம் சர்வாதிகாரியாக மாறுவேன். அது என் தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்ல. கட்சி வளர்ச்சிக்காக. எனவே தவறு செய்வோர் திருந்திக் கொள்ளுங்கள். 
-    ஸ்டாலின்

*    பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போன்ற அ.ம.மு.க.வில் இரண்டாண்டுகளாக இருந்துவிட்டேன் அந்தக் கட்சியில், உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. தினகரனை நம்பிச் சென்றவர்கள், தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சியில் உள்ளோர், ஆபாச படம் எடுப்போர்.
-    பெங்களூரு புகழேந்தி. 

*    வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர மாட்டோம். மாநகராட்சிகளில் எங்கள் கட்சி வலுவாக உள்ளது என்பதால், எங்கள் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவிடம் பேசி, மேயர் பதவிகள் கேட்போம். அவ்வாறு கேட்பது எங்கள் உரிமை. பரிசீலிப்பதும், வழங்குவதும், மறுப்பதும் அவர்களின் முடிவு. 
-    சரத்குமார்
 

click me!