கருணாநிதி இருந்த இடத்தில் கூலிப்படை தலைவனா?: கலைவாணனை கதறவிட்டு, ஸ்டாலினை விக்கலெடுக்க வைத்த கடிதம்.

By Vishnu PriyaFirst Published Jan 9, 2019, 8:09 PM IST
Highlights

நின்றுவிட்டதுதான் திருவாரூர் இடைத்தேர்தல்! அனைத்துக் கட்சிகளும் ஆளாளுக்கு அவரவர் வேலைகளைப் பார்க்க போய்விட்டார்கள். ஆனால் திருவாரூர் தி.மு.க.வினர் ஸ்டாலினுக்குக் கொதித்துப் போய் ஒரு புகார்  கடிதத்தை அனுப்பியுள்ளனர். 
 

நின்றுவிட்டதுதான் திருவாரூர் இடைத்தேர்தல்! அனைத்துக் கட்சிகளும் ஆளாளுக்கு அவரவர் வேலைகளைப் பார்க்க போய்விட்டார்கள். ஆனால் திருவாரூர் தி.மு.க.வினர் ஸ்டாலினுக்குக் கொதித்துப் போய் ஒரு புகார்  கடிதத்தை அனுப்பியுள்ளனர். 

அதில் திருவாரூர் தொகுதியின் வேட்பாளராக கலைவாணன் அறிவிக்கப்பட்டதை மிகவும் கண்டித்தும், ‘அடுத்து தேர்தல் நடைக்கையில் தயவு செய்து அவரை வேட்பாளராக்காதீர்கள். முத்தமிழறிஞர் கோலோச்சிய இடத்தில் ஒரு கூலிப்படை தலைவரா?’ என்று அந்த கடிதத்தில் விளாசித் தள்ளியுள்ளனராம். வாசித்துப் பார்த்து விக்கித்துவிட்டாராம் ஸ்டாலின். 

கலைஞரின்  சாதனைகளை பட்டியலிட பக்கங்கள் போதாது. அவரது இடத்தில் எம்.எல்.ஏ.வாக நிறுத்தப்பட இருந்த கலைவாணனை பற்றிய சர்ச்சை பட்டியலின் ஹைலைட்டுகள் இதோ....

*    கொரடாச்சேரி அ.தி.மு.க. புள்ளி சம்பத்தின் கொலை வழக்கில் கலைவாணனும், அவரது அண்ணன் கலைச்செல்வனும் குற்றவாளிகள். குற்றப்பத்திரிக்கையில் இவர்களின் பெயர் உள்ளது. 

*    அடுத்த நான்கு வருடங்களில் கலைச்செல்வன் கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்லப்பட, கலைவாணன் திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆனார். அண்ணன் கொலையான நொடியில் இருந்து இவரையும் விரட்டிக் கொண்டிருக்கிறது பழைய பகை. 

*    எப்போதும் ஆயுதம் தாங்கிய கூலிப்படையினருடன் வலம் வரும் கலைவாணன், மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகிறாராம். 

*    திருத்துறைப்பூண்டி ரமேஷ் என்பவரது கடையை அடித்து நொறுக்கிய வழக்கு இவர் மீது உள்ளது. தன் கையில் பெரும் கூலிப்படையை வைத்து மிரட்டல் அரசியல் செய்கிறார் என்று புகார். 

*    முகம்மது ரபீக் என்பவரின் பனிரெண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்த குற்றச்சாட்டு உள்ளது. 

*    சமச்சீர் கல்விக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகையில், கொரடாச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியை இழுத்து மூடி போராட்டம் நடத்தியபோது ஒரு மாணவர் தவறி விழுந்து இறந்த விவகாரத்தில் ஊரில் பெயர் அதிகமாக கெட்டது. 

*    நில அபகரிப்பு வழக்கில் நெல்லை ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

*    விதிகளை மீறி ஊர்வலம் சென்ற வழக்கு. 

*    குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் உள்ளே சென்று, அங்கே சிறைக்காப்பாளரை தாக்கிய வழக்கு. 

*    ஐந்து கிரிமினல் வழக்குகளில் மூன்றில் இவர்தான் ஏ1.

*    எந்த நொடியும் இவரை வெட்டிச் சாய்க்க கூலிப்படை திட்டமிட்டே திரிகிறது. இந்தப் பயம் அவருக்கு நிறையவே உண்டு. 

*    தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர், கலைவாணனின் உறவினர் பெண்ணை காதலிக்க, அந்த இளைஞரை ரவுடிகளை விட்டு தாக்கிய விவகாரத்தில் தலை உருளுகிறது. இப்படி நீள்கிறது அந்தப் பட்டியல். 

அறிவாலயத்துக்கு தன்னைப் பற்றிய புகார் ஓலை வந்திருக்கிறது என்பதை அறிந்த கலை, தானே முந்திரியாக ‘அதெல்லாம் அ.தி.மு.க. டீம் போட்ட பொய் வழக்குகள். அதுல பாதி, கழகத்துக்காக நடத்துன போராட்டம்.’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறாராம். அதேநேரத்தில் மீடியாக்களிடம் ‘எந்த அரசியல்வாதி மேலே வழக்கு இல்லைன்னு சொல்லுங்க!’ என்று நியாயம் கேட்கிறாராம். அதுவும் நியாயம்தானோ?

click me!