பள்ளி மாணவர்கள் இருவரது வங்கிக் கணக்கில் ரூ960 கோடி டெபாசிட்... அடேங்கப்பா இவ்வளவு பணத்தை யார் போட்டது..?

By Thiraviaraj RMFirst Published Sep 16, 2021, 4:05 PM IST
Highlights

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். அவர்கள் இருவரும் உத்தர் பீகார் கிராமின் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார் ஆகிய இருவரும் தங்களது பள்ளிச் சீருடைக்காக அரசு எவ்வளவு ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது என்று சோதனை செய்வதற்காக அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளனர்.

வங்கியில் சோதனை செய்தபோது விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடிரூபாய் பணமும், அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணமும் இருந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்த நிலையில் வங்கி மேலாளர் மனோஜ் குப்தாவும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, அவர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியாதபடி முடக்கியுள்ளார்.தவறுதலாக செலுத்தப்பட்ட பணம் எங்கிருந்தது வந்தது என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!