திருக்குவளையில் இருந்து விரைந்து வந்த 85 வயது பாட்டி; கருணாநிதி மீதான பாசத்தால் நெகிழ்ச்சி!

 
Published : Jul 27, 2018, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
திருக்குவளையில் இருந்து விரைந்து வந்த 85 வயது பாட்டி; கருணாநிதி மீதான பாசத்தால் நெகிழ்ச்சி!

சுருக்கம்

85 year old grandmother from Tirukkuvalai for karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள திருக்குவளையில் இருந்து 85-வயது பாட்டி கோபாலபுரத்திற்கு வருகை தந்திருப்பது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு வீட்டில் இருந்த படியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரைக்கான அரசியல் தலைவர் மற்றும் நடிகர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக 85-வயதுடைய பாட்டி கோபாலபுரத்திற்கு வருகை தந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது நீங்கள் எங்கிருந்து வருகின்றனர் என்று கேட்ட போது நான் திருக்குவளையில் இருந்து வருகிறேன் என்றார். திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்ததும் உடனே சென்னை விரைந்தேன் என்று பாட்டி கூறியுள்ளார். 

கோபாலபுரத்திற்கு வழி தெரியாததால் மத்திய கைலாஷில் இறங்கிவிட்டேன். மீண்டும் வழிகேட்டு கோபாலபுரத்திற்கு வந்தடைந்தேன் என்றார். திமுக தலைவர் கருணாநிதியை ஒரே ஒரு முறை ஓரமா நின்னு தலைவரை பார்த்துட்டு விட்டு செல்கிறேன் என கண்ணீர் மல்க கூறினார். எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததே கருணாநிதி தான் என்று கண்ணீர் மல்க கூறியது அங்கிருந்தவர் கண்ணீர் வந்தது.

இவர் பேசிக்கொண்டதை கவனித்த பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ அவர்கள் விசாரித்து அழைத்து சென்றார். பின்பு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருணாநிதி உடல்நலம் கேட்டறிந்து நிம்மதி பெருமூச்சுடன் பின் வெளியே வந்தார். பிறகு பணம் கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டார். அவரைப் போன்ற பயன்கருதா தொண்டர்களின் இயக்கப் பற்றுமே திமுகவிற்கு நாளும் வலு சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞரின் உயிர் தன்னலம் அறியாத இந்த தாய்களிடம் இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!