8 வழிச்சாலை அமைக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சரவெடி பதில்.. விவசாயிகள் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Dec 9, 2020, 4:23 PM IST
Highlights

திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா என முதல்வர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

விடுபட்ட பகுதிகளிலும் புயல், மழை சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். 

புயல், மழை சேதகங்கை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- டெல்டா சமபரப்பாக இருப்பதாலும் கடல் சீற்றத்தாலும் மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல் தண்ணீர் தேங்குகிறது. 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்?  பயனளிக்கும் என்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்கிறது. மற்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் இருப்பதால் அதை அகற்ற மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. 

விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்கவேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம். விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்.  8 வழிச்சாலை அமைக்கப்படுமா என முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரிவாக்கம் அவசியம். 

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். நிலம் கையப்படுத்தியது மட்டுமே மாநில அரசு என்றார். 8 வழிச்சாலை என்பது நீண்ட கால திட்டம். இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும். வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது. நாடு, தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம். திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா என முதல்வர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!