
ஏற்கெனவே 5 எம்பிக்கள் ஒபிஎஸ்சிடம் ஐக்கியமாகி உள்ள நிலையில் மேலும் 2 எம்பிக்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன், நாமக்கல் மக்களைவை உறுப்பினர் பி.ஆர் சுந்தரம், கிருஷ்ணகிரி அசோக் குமார், திருப்பூர் சத்யபாமா, திருவண்ணாமலை வனரோஜா என 5 எம்பிக்கள் இதுவரை ஆத்ரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று வேலூர் எம்.பி செங்குட்டுவன், தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் , எம்பியுமான மருதுராஜா ஆகியோர் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒபிஎஸ்சுக்கு ஆதரவளித்த எம்பிக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. எம்எல்ஏக்களை பிடித்து சிறை வைத்துள்ள சசிகலா தரப்பு ஒட்டுமொத்த எம்பிக்களையும் கோட்டை விட்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.
மொத்தமுள்ள 49 +1 (சசிகலா புஷ்பா) சேர்த்து 50 பேர் அதிமுக எம்பிக்களாக உள்ளனர்.
இதில் 30க்கும் மேற்பட்டோர் ஒபிஎஸ்சுடன் செல்வதை தடுக்கவே முடியாது என்கின்றனர் அதிமுக எம்பிக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர்கள்.
உட்கார்ந்த இடத்திலேயே அடித்து தூக்கி கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் என்றால் அது மிகையல்ல