8 தொகுதிகள் வேணும்... அதிமுக கூட்டணியில் தன் பங்கை அறிவித்தார் ஏ.சி. சண்முகம்..!

By Asianet TamilFirst Published Jan 31, 2021, 8:57 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்  7 முதல் 8  தொகுதிகள்  வரை கேட்போம் என்று புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

மதுரைக்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சி  நீடிக்கிறது. வாஜ்பாய் காலத்திலிருந்தே தேசிய ஜனநாயக கூட்டணி நாங்கள் அங்கம் வகித்து வருகிறோம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூரில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி அறிவிக்கும் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்.


பிரதமர் மோடியின் தலைமையில்  இந்தியா வல்லரசாக மாறியுள்ளது. கொரோன தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்கி சிறப்பாக பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் நிச்சயம் ஆட்சி அமையும். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில்  7 முதல் 8  தொகுதிகள்  வரை கேட்போம். எடப்பாடி முதல்வராக 100 நாட்கள் கூட நிலைக்க மாட்டார் என்று மு.க. ஸ்டாலின் கூறினார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாகப் பயணித்து வருகிறார்.” என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் பாஜக 50 முதல் 60  தொகுதிகளை கேட்பதாகக் கூறப்படுகிறது. தேமுதிக 41 தொகுதிகளை கேட்டு வருகிறது. இந்நிலையில் புதிய நீதி கட்சி 8 தொகுதிகள் வரை கேட்போம் என்று அறிவித்துள்ளது.

click me!