கர்நாடகாவில் 70 சதவீதம் வாக்குப்  பதிவு…. யார் அங்கு ஜெயிக்கப் போகிறார்கள் ? வாக்குப்  பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது?

 
Published : May 13, 2018, 07:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
கர்நாடகாவில் 70 சதவீதம் வாக்குப்  பதிவு…. யார் அங்கு ஜெயிக்கப் போகிறார்கள் ? வாக்குப்  பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ன சொல்கிறது?

சுருக்கம்

70 percentage polling in karnataka election

நேற்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தொங்கு சட்டப் பேரவை அமைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், ஜெய் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் இறந்ததால் அந்த தொகுதிக்கும், பாஜக-வினரால் வாக்காளர் அட்டை பதுக்கல் நடந்த ராஜ ராஜேஸ்வரி தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை. ஏனைய 222 தொகுதிகளுக்கும் நேற்று  வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 4 கோடியே 96 லட்சம் பேருக்காக மாநிலம் முழுவதும் 56 ஆயிரத்து 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. ஆரம்பம் முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர்.

சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் வாக்குப்பதிவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் கோளாறுகள் சரிசெய்யப் பட்டும், மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதலமைச்சர்  சித்தராமையா சாமுண்டேஸ்வரி தொகுதியிலும், பாஜக தலைவர் எடியூரப்பா, சிமோகா தொகுதிக்கு உட்பட்ட ஷிகர்பூர் வாக்குச்சாவடியிலும் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

பெலகாவியில் பெண் வாக்காளர்களின் புர்காவைஅகற்றச் சொன்னதால் சிறிதுநேரம் சர்ச்சை ஏற்பட்டது.பெங்களூரு ராஜாஜிநகர் வாக்குச் சாவடியில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஹம்பி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜக-வினருக்கும், வாக்குப்பதிவின் போது கை கலப்பு ஏற்பட்டது. சிலர் காயமும் அடைந்தனர். அவர்களில் சிலரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவின் ஹெப்பல் தொகுதியில் தேர்தல் அதிகாரியுடன் தகராறு செய்த பாஜக தொண்டரும் கைது செய்யப்பட்டார்.மாண்டியா மாவட்டத்தின் மதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஹேமன ஹல்லி பகுதியில், அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததைச் சுட்டிக்காட்டி தலித் மக்கள் 300 பேர் தேர்தலை புறக்கணித்தனர்.

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் தெரி யாமல், அந்த தொகுதிக்கு உட்பட சிலர் வாக்குச் சாவடிக்கு வந்து, வெறுமனே திரும்பிச் சென்றனர்.

மற்றபடி அமைதியாக நடந்து முடிந்த இந்த தேர்தலில் மாலை 6 மணி வரை சுமார் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின.இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய தங்களின் கருத்துக் கணிப்புக்களை, ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டுள்ளன. இவற்றில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல தனிப்பெரும் கட்சி விஷயத்திலும், காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் டைம்ஸ் நௌ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!