விலையை உயர்த்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சி... மதுபானத்திற்கு 70 சதவிகிதம் கொரோனா சிறப்பு வரி..!

Published : May 05, 2020, 01:56 PM IST
விலையை உயர்த்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சி... மதுபானத்திற்கு 70 சதவிகிதம் கொரோனா சிறப்பு வரி..!

சுருக்கம்

வருமானத்தை பெருக்கும் விதத்திலும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டியும் மதுபானம் மீது 70 சதவிகிதம் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்ட போதிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

வருமானத்தை பெருக்கும் விதத்திலும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டியும் மதுபானம் மீது 70 சதவிகிதம் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்ட போதிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

டெல்லியில் மதுபானம் மீது 70 விழுக்காடு கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டிலின் அதிகபட்சவிலை மீது இந்த வரி விதிக்கப்படுவதாகவும், இன்று முதல் வரி உயர்வு அமலுக்கு வருவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் 150 மதுக்கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால், மதுபிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். முகக் கவசங்கள் அணியாமலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் குவிந்தனர். 70 சதவிகிதம் கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்ட போதிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

அதிக கூட்டத்தால் கரோல்பாக் திரிலோக்புரி, முனிர்கா உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்காவிடில், தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளும் மதுபான விற்பனையை அதிரடியாக உயர்த்தி உள்ளன.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!