7 பேர் விடுதலையில் நாங்க ஒண்ணும் பண்ண முடியாது... கைவிரித்த முதல்வர்..!

Published : Jul 09, 2019, 04:50 PM ISTUpdated : Jul 09, 2019, 04:53 PM IST
7 பேர் விடுதலையில் நாங்க ஒண்ணும் பண்ண முடியாது... கைவிரித்த முதல்வர்..!

சுருக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் சரியாக செய்துவிட்டோம், இனி ஆளுநரே முடிவு எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமிக்கும், திமுக சார்பில் துரைமுருகனுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக ஆட்சியில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ஒருவரை மட்டும் விடுதலை செய்யலாம் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றியது. 

அதிமுக ஆட்சியில், எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு, தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவிட்டோம். நாங்கள் என்ன செய்ய முடியுமோ அதை சரியாகச் செய்துவிட்டோம். இனி முடிவெடுப்பது ஆளுநரே என்று கூறினார். 

இதற்கு பதிலளித்த துரைமுருகன், எங்கள் ஆட்சியில் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது என்றார். அப்போது பேசிய முதல்வர், திமுக ஆட்சி காலத்தில் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம் என்று பதிலளித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!