எதுக்கு இப்படி பண்ணுறீங்க? மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை பண்ணுங்க.. ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை.!

By vinoth kumarFirst Published Nov 24, 2020, 12:53 PM IST
Highlights

தமிழக ஆளுநரிடம்  7 பேர் விடுதலை விவகாரம் மற்றும் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக ஆளுநரிடம்  7 பேர் விடுதலை விவகாரம் மற்றும் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து, தான் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார். இச்சந்திப்பின்போது, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கழக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தயாநிதி மாறன் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்;- பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் பரிசீலித்து முடிவு செய்வதாக ஆளுநர் கூறினார். 7 பேர் விடுதலை காலதாமத்திற்கு ஆளுநர் சட்ட விளக்கங்களை தந்தார். மனிதாபிமான அடிப்படையில் 7 பேரை ஆளுநர் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் என்றார். மேலும், தமிழக ஆளுநரிடம் வேறு விஷயங்கள் குறித்தும் பேசினோம். இதை வெளியில் சொல்ல முடியாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!