கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு.. தமிழக அரசு அதிரடி..

Published : Jun 05, 2021, 11:38 AM IST
கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு.. தமிழக அரசு அதிரடி..

சுருக்கம்

இந்நிலையில் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. 

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணத்துடன் தோன்றி ஆபாசமாக நடந்து கொண்டார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அதே போல் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல  மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தொந்தரவு கொடுத்து வந்ததாக அவரே வாக்கு மூலம் அறித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு 11-ஆம் தேதிக்குள் அரசிடம் வரைவு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

அதேபோல்,  நேரடி வகுப்புகளைப் போன்றே, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, வகுப்புகளை முழுவதுமாக ரெக்கார்ட் செய்ய நடவடிக்கை, புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் அதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  வரும் 7-ம் தேதி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி