28 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி... திருவண்ணாமலையில் பரபரப்பு..!

Published : Sep 22, 2020, 08:22 AM IST
28 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி... திருவண்ணாமலையில் பரபரப்பு..!

சுருக்கம்

திருவண்ணாமலையில் 67 வயதான மாவட்ட திமுக துணைச் செயலாளர் 28 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருவண்ணாமலையில் சாவல்பூண்டியைச் சேர்ந்தவர் மா. சுந்தரேசன். 67 வயதான சுந்தரேசன் பல ஆண்டுகளாக திமுகவில் உள்ளார். 6 முறை சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறார். எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியான இவர், தற்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். ‘சாவல்பூண்டி சங்கப்பலகை’ என்ற அமைப்பை உருவாக்கி, அதில் பேச்சாளர்களையும் உருவாக்கி வருகிறார். அவரிடம் பட்டிமன்ற பேச்சாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயது பெண் அபிதா அறிமுகமானார். நாளடைவில் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.


3 ஆண்டுகளாக காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். சுந்தரேசனுக்கு ஏற்கனவே மனைவி, மகன், மகள் உள்ளனர். பேத்தி வயதில் உள்ள பெண்ணை திமுக திருமணம் செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய திருமணத்தை சமூக ஊடங்களில் அதிமுகவினர் கிண்டலடித்து வருகிறார்கள். ‘கப்புல் சேலஞ்ச்’ என்ற பெயரில் இவருடைய திருமண புகைப்படத்தையும் பகிர்ந்துவருகிறார்கள்.  
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி