
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களின் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் அ.தி.மு.கவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்துவிட்டது. இதேபோல் தி.மு.க ம.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்டக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தேர்தல் மேற்பார்வையாளர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில், தி.மு.க - காங்கிரஸ் இடப் பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நீண்ட இழுபறிக்கு பின்னர் சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது திருவொற்றியூர்( வார்டு எண்: 18), பெரம்பூர்(45), திருவிக நகர்(72) அண்ணா நகர்(107), அசோக்நகர்(135), பள்ளிக்கரணை(190) ஆகிய 6 வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு கோரி கூட்டணி கட்சிகள், முதன்மை கட்சியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 18, 45, 72, 107, 135, 190 ஆகிய 6 வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.