அதிமுகவில் முன்னாள் எம்.பி. உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

Published : Mar 30, 2021, 12:58 PM ISTUpdated : Mar 30, 2021, 03:07 PM IST
அதிமுகவில் முன்னாள் எம்.பி. உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

சுருக்கம்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் எம்.பி.ஏழுமலை, ஈஸ்வரசாமி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் எம்.பி.ஏழுமலை, ஈஸ்வரசாமி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும்.

 விதத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தாலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெ.ஏழுமலை (முன்னாள் எம்.பி.யும், மேல்மலையனூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்), திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி, ஈஸ்வரசாமி( பொள்ளாச்சி தெற்கு(கிழக்கு) ஒன்றியக் கழக துணைச் செயலாளர்), நாகராஜ் (குடிமங்கலம் ஒன்றிய எம்ஜிஆர் மன்றஇணைச் செயலாளர்),  ரங்கசாமி (ஆத்துக்கிணத்துப்பட்டி ஊராட்சிக் கழக முன்னாள் செயலாளர் குடிமங்கலம் ஒன்றியம்), கமலஹாசன் (சோமவாரப்பட்டி குடிமங்கலம் ஒன்றியம்) ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் கம்மகண்டிகை கிளைக் கழகச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். 

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!