
பரபரப்புக்கு பேர் போன தெலுங்கான முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், அரசு பணத்தில் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான , தங்க வைர நகைகளை திருப்பதி கோவிலுக்கு அளித்துள்ளார்.
அதுவும் தனிப் பட்ட வேண்டுதல் இல்லை , ஒன்றுபட்ட ஆந்திராவை திருப்தி ஏழுமலையான் இரண்டாக பிரித்து, துண்டாடி கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய வேண்டுதல் ஆகும்.
ஏற்கனவே, தனது அரசு இல்லத்தை பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி , அனைவரையும் வாய்ப்பிளக்க செய்யும் வகையில், ஆடம்பரமாக விழா நடத்தி, குடியேறினார்.
இந்நிலையில் தனது மகனும் அமைச்சருமான கே. டி தாரக ராமா ராவ், அவரது மகளும் எம் பி யுமான கவிதா மற்றொரு அமைச்சரும் மைத்துனருமான ஹரிஷ் ராவ் உள்ளிட்ட குடும்பத்தினருடன் படை பரிவாரங்கள் புடைசூழ, திருப்பதிக்கு வருகை புரிந்தார்.
தனது எதிரி மாநிலம் போல் பாவிக்கும் பழைய ஆந்திராவின் ஒரு பகுதியான , திருப்பதிக்கு அரசு மரியாதையோடு வருகை தந்தார் .
திருப்பதி அறங்காவலரான சகலவாடா கிருஷ்ணமூர்த்தி மற்றும் புரோகிதர்கள் , சந்திர சேகர் ராவையும் அவரது குடும்பத்தினரையும் வரவேற்றனர் .
சாமி தரிசனத்திற்கு பிறகு 5 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் , 14 கிலோ எடை உள்ள தங்க சாலகிராம ஆரம் மற்றும் 19 கிலோ எடை கொண்ட தங்க கண்ட ஆரம் ஆகியவற்றை வழங்கினார் .
பொதுவாகவே , இது போன்ற காணிக்கை செலுத்துவது என்பது , யாரேனும் உடல் நிலை சரி இல்லை என்றாலோ, அல்லது ஏதாவது மற்ற பிற வேண்டுதல் என்றால் மட்டுமே இது போன்ற காணிக்கை, செலுத்துவது வழக்கம் .
ஆனால் ஒரு மாநிலத்தையே இரண்டாக பிரித்து துண்டாட வேண்டும் என்பதற்காக ஒரு முதல்வரே இவ்வாறு கடவுளுக்கு வேண்டி இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.