
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, அடிக்கடி ஏதாவது கருத்துகளை, தனது டுவிட்டரில் பதிவு செய்து, சர்ச்சையை கிளப்பி வருகிறார். கடந்த ஜனவரி
மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,
அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பொறுக்கிகள் என கூறினார். இதனால், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது சுப்பிரமணிய சாமி, இளைஞர்களையும், திமுகவினரையும் தாக்கி பேசியபடி, தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், அவர்
குறிப்பிட்டுள்ளதாவது.
''தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றுக்கட்சியாக பாஜக தலையெடுக்கும் வரை, இந்து அமைப்பு போராளிகளான எங்களுக்கு அதிமுகவை ஆதரிப்பதைத் தவிர வேறு
வழியில்லை. பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை வழியாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் 6 பேர் சென்னைக்குள் புகுந்துவிட்டனர். அவர்கள், தமிழக
பொறுக்கிகளை குறிவைத்து வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.'
சுப்பிரமணிய சாமியின் இந்த பதிவை பார்த்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர். பதிலுக்கு அவர்களும், தங்களது பதிவுகளை
சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும், பகிரங்கமாகவும் பதிவிட்டு வருகின்றன