
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணியின் வேட்பாளராக களமிறங்கும் டி.டி.வி தினகரன், 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிக்கைகளை அறிவித்தார்.
இந்த தேர்தல் அறிக்கையை பண்ரூட்டி ராமச்சந்திரன் வெளியிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுகொண்டார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :
அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மாசு இல்லாமல் நவீன மயமாக்கப்படும்.
புதிய மீன் அங்காடி அமைக்கப்படும்.
எண்ணூர் -மணலி சாலையில் 117 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்.
அரசு மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.
வாரந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்.
இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையங்கள் அமைக்கபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.