500 மதுக்கடைகள் மூட உத்தரவு – முதலமைச்சர் எடப்பாடியின் முதல் கையெழுத்து

 
Published : Feb 20, 2017, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
500 மதுக்கடைகள் மூட உத்தரவு – முதலமைச்சர் எடப்பாடியின் முதல் கையெழுத்து

சுருக்கம்

முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் கூடுதலாக 500 மதுக்கடைகள் மூடும் உத்தரவும் அடக்கம்.

கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற ஜெயல்லிதா, தனது முதல் கையெழுத்தாக 5 டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவு உள்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, அதே போன்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், மறைந்த முதல்வர் ஜெயல்லிதா போலவே500 மதுக்கடைகளை மூடும் பிரதான கோப்பும் அடங்கும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதன்பின்னர், நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இன்று தலைமை செயலகம் சென்றார். முதல்வர் ஜெயல்லிதா பயன்படுத்திய அதே அறையில் அமர்ந்து முதல்வராக பொறுப்பேற்றார்.

பின்னர், 5 கோப்புகளில் அவர், கையெழுத்திட்டர். அதில், பிரதான உத்தரவாக 500 மதுக்கடைகளை மூடும் உத்தரவு கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.

ஏற்கனவே, 500 மதுக்கடைகளை மூட மறைந்த முதலமைச்சர் ஜெயல்லிதா உத்தரவிட்ட நிலையில், மேலும், 500 மதுக்கடைகளை மூட எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர மகளிர் மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் என உயர்த்தும் உத்தரவு, உழைக்கும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இரு சக்கர வாகனங்கள் வாங்கும் மானிய தொகை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்கும் உத்தரவு.

மீனர்களுக்கான தனி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.1.75 லட்சம் மதிப்பில் 5000 வீடுகள் கட்டும் திட்டம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகையை, இரு மடங்காக உயர்த்துவது உள்பட 5 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்