
வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பழனிச்சாமி முறைப்படி தலைமை செயலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு முதல்வராக பதவியேற்றார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பயன்படுத்திய அறையை பயன்படுத்தவில்லை.
ஆனால் எடப்பாடி அவரது அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து பொறுபேற்றார்.
முதல்வராக பொறுப்பற்ற பழனிச்சாமி கடந்த 18ஆம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
சட்டசபையிலும் முதல்வர் அமர்ந்திருந்த தனி நாற்காலியில் எடப்பாடி அமர்ந்திருந்தார். இன்று முதல்வராக முறைப்படி பொறுப்பேற்க தலைமை செயலகம் வந்தார் பழனிச்சாமி.
முதல்வராக பொறுபேற்க ஜெயலலிதாவின் அரை தயார் செய்யபட்டிருந்தது.
பன்னீர்செல்வம் முத்லவராக இருந்தபோது முதல்வர் ஜெ. அறையை பயன்படுத்தவில்லை.
மரியாதை கருதி தன் அறையையே முதல்வர் அறையாக பயன்படுத்தினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்த அறையையே பயன்படுத்த போகிறார் என்று அரசு ஊழியர்களுக்கே குழப்பம் நீடித்தது.
முதல்வர் ஜெ, பயன்படுத்திய அதே அறையை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்துவார் என்று உத்தரவிடப்பட்டது.
முதல்வர் பழனிசாமி மறைந்த முதல்வர் ஜெ படத்துக்கு மரியாதை செலுத்தியபின் ஜெயலலிதாவின் அறைக்கு சென்றார்.
அங்கே அவரை அமைச்சர்கள் அனைவரும் வரவேற்றனர்.பின்னர் மறைந்த முதலவர் ஜெயலலிதா வழக்கமாக அமரும் நாற்காலில் முதல்வருக்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
பின்னர் அவருக்கு அமைச்சர்கள் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது தனது விசுவாசத்தை காண்பிக்க தன் வீட்டில் கூட முதலமைச்சர் என்ற பெயர் பலகையை வைக்கவில்லை.
தன்னை அதிகம் வெளிகாட்டி கொள்ளவில்லை.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இது அதனையும் உடைத்தெறிந்தார்.
ஜெ. பயன்படுத்திய அறையையும் நாற்காலியையும் பயன்படுத்தினார்.