
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட 5 திட்டங்களுக்கும் ஓ.பி.எஸ். அணியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் பெருமபான்மையை நிரூபித்தார். இதையடுத்து இன்று முதல்வராக முறைப்படி பொறுப்பேற்க தலைமை செயலகம் வந்தார்.
அங்கு ஜெயலலதா படத்திற்கு மரியாதை செலுத்திய எடப்பாடி ஜெயலலிதா அறைக்கு சென்றார். அங்கே அவரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வரவேற்றனர்.
பின்னர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்து முதல்வருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர், 500 மதுக்கடைகளை மூடுவது, மகளிர் மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்துவது, உழைக்கும் பெண்களுக்கான இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், மீனவர்களுக்கு தனி வீடு வசதி திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டும் திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகையை இரு மடங்காக உயர்த்துவது உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
விரைவில் ஒ.பி.எஸ். பயண அட்டவணை அறிவிக்கப்பட இருக்கிறது.
முதலமைச்சர் பழனிச்சாமி கையெழுத்திட்ட 5 திட்டங்களுக்கும் வடிவமைப்பு கொடுத்தது ஓபிஎஸ். அது வரவேற்கதக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.