
நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.கவை நெருக்க விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது. சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் நமது கட்சியை தலித் கட்சி என்று சொல்வதோடு மட்டும் அல்ல வட மாவட்ட கட்சி என்றும் மக்கள் கூறுவதாக தெரிவித்தனர்.
நிர்வாகிகள் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்ட திருமாவளவன், இறுதியாக பேசினார். அப்போது எனக்கும் நமது கட்சி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்றே ஆசை உள்ளது. ஆனால் தி.மு.கவாக இருந்தாலும் சரி அ.தி.மு.கவாக இருந்தாலும் சரி ஏன் மக்கள் நலக்கூட்டணியில் கூட நமது கட்சிக்கு கடலூரை தாண்டி தொகுதிகளை தர மறுக்கிறார்கள்.