திமுக இளைஞரணி சார்பில் 40 ஆயிரம் கண்மாய்கள் தூர்வாரப்படும் !! உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு !!

Published : Sep 07, 2019, 07:54 PM IST
திமுக இளைஞரணி சார்பில் 40 ஆயிரம் கண்மாய்கள் தூர்வாரப்படும் !! உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் 40,000 கண்மாய்களை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளதாக இளைஞரஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்தள்ளார்.  

திமுக இளைஞரணி சார்பில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணியினர் மதுரை கிழக்கு தொகுதி நாராயணபுரம் குளத்தை தூர்வாரி கரையை மேம்படுத்தி நடைபாதை அமைத்துள்ளனர். அதை மக்கள் பயன்பாட்டிற்கு தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''தமிழகத்தில் உள்ள குளங்களை தூர்வாரி சீர் செய்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். 


அதன் அடிப்படையில் இன்று இங்கு இந்தக் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளோம். அரசு செய்யவேண்டியதை நாங்கள் செய்துள்ளோம். இதுபோன்ற சிறப்பான பணிகள் மேலும் தொடரும் என தெரிவித்தார்.

இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நாளை திருவாரூரில் தூர்வாரும் பணி தொடங்க உள்ளோம். முதல் கட்டமாக 2 குளங்களை தூர்வார உள்ளோம். தொடர்ந்து தமிழகம் முழுவதும் 40,000 கண்மாய்களை தூர்வார முடிவெடுத்துள்ளோம். 

வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் வந்தால் தான் முதலீடுகள் குறித்து தெரியும். ஏற்கனவே தமிழகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எந்தப்பலனும் கிடைக்கவில்லை எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!