ஸ்டாலினுக்கு 4 ஆண்டு சிறை...!! தேர்தலில் நிற்க தடை: வில்லங்கமாகும் ‘காவிரி’ வழக்கு, மோடி போடும் பகீர் ஸ்கெட்ச்!

By Vishnu PriyaFirst Published Dec 28, 2019, 11:24 AM IST
Highlights

இன்னும் 3 மாதங்களில் வழக்கினை விசாரித்து முடித்து, தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பதே அவர்களின் ஆர்வம்! என்கின்றனர். ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவே முடியாத அளவுக்கு அப்படியென்ன தீர்ப்பு வர வாய்ப்புள்ளது? 

சர்வதேச அளவில் பிரமிப்பாக பார்க்கப்படும் பிரதமர் நரேந்திர மோடியிடம், ‘அடிபணியவும் மாட்டோம்! அடங்கிப் போகவும் மாட்டோம்!’ என்று திமிறி நிற்கும்  சொந்த நாட்டின் மிக சில மாநிலங்களில் மிக முக்கியமானது தமிழ்நாடு. இந்த எதிர்ப்பினை பெரியார், அண்ணா,  கருணாநிதி ஆகிய திராவிட தலைவர்களை தங்களது வழிகாட்டியாக காட்டி, ’பாசிச பா.ஜ.க. ஒழிக!’ என்று ஓலமிட்டு வழிநடத்துகிறது தி.மு.க. 

அக்கட்சியின் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையில் பெரும் யுத்தம்தான் நடந்து கொண்டிருக்கிறது. எப்போது சிக்குவார், எதில் சிக்குவார், வெச்சு செஞ்சுடலாம்! என்று ஸ்டாலினுக்கு வழக்குகளை வலையாக விரித்துக் காத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.வும், அதன் தோழனான அ.தி.மு.க.வும். 

’அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியில் தி.மு.க.வையும், அதன் தலைவரான ஸ்டாலினையும் மடக்கிடுவது எளிதல்ல. ஆனால் ஸ்டாலின் செய்த தவறை அடிப்படையாக வைத்து, சம்பந்தப்பட்ட வழக்கினை காரணங்காட்டி அவரை முடக்கிடலாம்! என்பதே மாநில மற்றும் மத்திய அரசுகளை ஆளும் அதிகார மையங்களின் நோக்கம். இவர்களின் இந்த திட்டத்துக்குதான் பக்காவாக இப்போது கைகொடுக்கிறது ஒரு வழக்கு. 


அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்தது.  தன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆர்பாட்டத்தையும் நடத்தியது. சென்னையில் சிம்ஸன் பகுதியில்  ஒன்று கூடி பின் மெரீனாவின் காமராஜர் சாலையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது பெரும் கூட்டம் அப்போது போலீஸின் தடுப்புகளை உடைத்து முன்னேறினர். திருவெல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரீனா கடற்கரை சாலை, அண்ணாசாலை ஆகியவற்றில் இவர்களால் போக்குவரத்து பாதிப்பும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் உருவானதாம். 

இந்த நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட  ஏழு தலைவர்கள் மீது சென்னை சிட்டி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. எலும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, சமீபத்தில் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட ஏழு பேரையும் ஆஜராக சொல்லி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. 

பிற வழக்குகள் போல் இல்லாமல், எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடக்க இருக்கிறது இவ்வழக்கு. அதன் தீர்ப்பு ஸ்டாலினுக்கு பெரும் பாதகமாக சென்று, அதில்  கிடைக்கும் தண்டனையின் மூலம் அவர் தேர்தலில் நிற்பதே தடைபட்டு போகும் வாய்ப்புள்ளது! என்கிறார்கள் ஆளுங்கட்சியினர். இந்த வழக்கின் திடீர் எக்ஸ்பிரஸ் வேகமும், போக்கும் டெல்லி அதிகார மையத்தின் ஆணையே! என்கிறார்கள். அதேவேளையில், சட்டத்தை வளைத்தோ, மீறியோ எதையும் டெல்லி அதிகார மையம் செய்யவில்லை. இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். 

இன்னும் 3 மாதங்களில் வழக்கினை விசாரித்து முடித்து, தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பதே அவர்களின் ஆர்வம்! என்கின்றனர்.  ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவே முடியாத அளவுக்கு அப்படியென்ன தீர்ப்பு வர வாய்ப்புள்ளது? என்று கேட்டபோது “அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி சில மாதங்களுக்கு முன் ஒரு வழக்கின் தீர்ப்பின் மூலம் பதவி இழந்தார். 1998ல் அவர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைக்காக மூன்று ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதாலேயே அவரது பதவி பறி போனது. அதேபோன்றொரு இக்கட்டுதான் ஸ்டாலினுக்கும் வரலாம் என தெரிகிறது. இந்த காவிரி போராட்ட வழக்கின் தீர்ப்பில் ஸ்டாலினுக்கு நான்கு வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி கிடைத்தால் உடனடியாக அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும், 

மேலும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும்! இதன் மூலம் ஸ்டாலினின் ‘முதல்வர் கனவு’ கலைந்து போகும். சொல்லப்போனால் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும். இதுதான் மோடி போட்டிருக்கும் அரசியல் ஸ்கெட்ச்! இதில் டெல்லியின் அதிகார அத்துமீறலோ, குறுக்குவழி செயல்பாடுகளோ எதுவுமே இல்லை. ஸ்டாலினுக்கு இயல்பாக அமைந்திருக்கிறது இந்த சிக்கல்.” என்கிறார்கள். அரசியல் வட்டாரத்தை கலக்கி வரும் இந்த வழக்கு விவகாரமானது அ.தி.மு.க.வுக்கு பெரும் குஷியை தந்துள்ளது. ஆனால், தி.மு.க.வோ ‘அதையெல்லாம் எப்பவோ கணித்து, தகுந்த ஏற்பாடோடுதான் இருக்கிறோம். தலைவர் எந்த தவறும் செய்யவில்லை, இந்த வழக்கினால் அவருக்கு எந்த பாதகமும் வராது.” என்கிறார்கள். 
கவனிப்போம்யா!
-    
 

click me!