ஓரம் கட்டப்படும் சீனியர்கள்..! அதிகாரத்திற்கு வரும் பிகே குரூப்! ! திமுகவின் மார்ச் பிளான்!

By Selva KathirFirst Published Dec 28, 2019, 11:00 AM IST
Highlights

தவிர தேர்தல் செலவு விவகாரத்திலும் பிகே டீம் என்ன சொல்கிறதோ அதைத்தான் பின்பற்றியாக வேண்டுமாம். மேலும் பிரச்சார வியூகம், தேர்தல் பணிகள் என அனைத்தும் பிகே டீம் மேற்பார்வையில் தான் நடைபெறும் என்கிறார்கள்.

திமுகவின் எதிர்கால செயல்பாடுகள் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோரின் டீமிடம் சென்றுவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  கலைஞர் மறைவுக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலது மற்றும் இடது கரமாக இருந்தவர்கள், இருப்பவர்கள் துரைமுருகன் மற்றும் ஆ.ராசா தான். இவர்கள் தவிர எவ வேலு, டி.ஆர். பாலு போன்றோரும் ஸ்டாலினுக்கு நெருக்கமான தொடர்பில் இருந்து வந்தனர். அரசியல் ரீதியிலான முடிவுகள், கட்சி செயல்பாடுகள், நிர்வாகிகளின் கண்காணிப்பு போன்றவை இந்த ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மூலமாகத்தான் திமுகவில் செயல்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் அண்மையில் திமுக மிகப்பெரிய போராட்டத்தை சென்னையில் நடத்தியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இந்த போராட்ட பேரணியில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் ஆப்சென்ட். அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஆ.ராசா கலந்து கொள்ளவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நீலகிரியில் ஆ.ராசா பிரச்சாரத்தில் இருந்தார்.

இந்திய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் ஒரு நிகழ்வில் ஆ.ராசா பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் திமுக கார்ப்பரேட் வசம் சென்றுவிட்டது என்கிற மனச்சோர்வு தான் என்கிறார்கள். இதே போலத்தான், முக்கிய நிர்வாகிகளும் மிகவும் மனச்சோர்வுடன் இருப்பதாக கூறுகிறார்கள். ஏனென்றால் பிரசாந்த் கிஷோர் டீம் எப்போதும வியூகம் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை.

 வேட்பாளர் தேர்வு வரை அவர்களின் அதிகாரம் நீளும் என்கிறார்கள். அதிலும் மாவட்டச் செயலாளர்கள் ரெக்கமன்டேசன் என்றால் பிகே டீம் பேக்ரவுண்ட் செக் இல்லாமல் ஓகே சொல்லாது என்று பேசிக் கொள்கிறார்கள். தவிர தேர்தல் செலவு விவகாரத்திலும் பிகே டீம் என்ன சொல்கிறதோ அதைத்தான் பின்பற்றியாக வேண்டுமாம். மேலும் பிரச்சார வியூகம், தேர்தல் பணிகள் என அனைத்தும் பிகே டீம் மேற்பார்வையில் தான் நடைபெறும் என்கிறார்கள்.

 இதன் மூலம் இயல்பாகவே இத்தனை நாள் இந்த பணிகளை கவனித்து வந்த சீனியர்கள் ஓரம்கட்டப்படுவது உறுதி என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பிகே டீமில் உள்ள கார்ப்பரேட் அதிகாரிகள் போன்ற நபர்கள் தான் இனி திமுகவின் முக்கிய முடிவை எடுப்பார்களோ என்கிற சந்தேகமும் சீனியர்களுக்கு உள்ளது. இதற்கிடையே மார்ச் முதல் திமுகவிற்கான தங்கள் பணிகளை பிகே டீம் ஆரம்பிக்க உள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் நடத்தியது போன்று எடப்பாடி அரசுக்கு எதிராக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோரை பங்கேற்கச் செய்வதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

click me!