4 தொகுதி இடைத்தேர்தல்... விரலில் மை வைக்கும் குழப்பத்திற்கு வழி கண்ட தேர்தல் ஆணையம்..!

By vinoth kumarFirst Published Apr 13, 2019, 5:10 PM IST
Highlights

4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இரு தேர்தலும் ஒரே நேரத்தில் நடப்பதால் எந்த விரலில் மை வைக்கப்படும் என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். 

இது தொடர்பாக பேட்டியளித்த தேர்தல் அதிகாரி மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரே விரலில், அதாவது ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். மேலும், அடுத்த மாதம் 19-ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்போது, ஏற்கனவே வைத்த மை அழியாது என்பதால் வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என தகவல் தெரிவித்தார். 

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினரால் இதுவரை 170 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

click me!