ரூ.109 கோடியில் 370 புதிய பேருந்துகள்... பட்டைய கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

Published : Sep 26, 2019, 12:38 PM IST
ரூ.109 கோடியில் 370 புதிய பேருந்துகள்... பட்டைய கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

சுருக்கம்

ரூ.109 கோடி மதிப்பீட்டில் 8 போக்குவரத்து கழகங்களுக்கு 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை சென்னையில் முதல்வர் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 65 பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 30 பேருந்துகள், கோவை -104, சேலம் -57, கும்பகோணம் -41, விழுப்புரம் -27, நெல்லை 26, மதுரை -20 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.109 கோடியில் 370 அரசு புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து சென்னையில் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பாக, இரண்டு கட்டங்களாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5,000 புதிய பேருந்துகளை வாங்க, அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டு காலகட்டங்களில், 1,160 கோடி ரூபாய் செலவில், 3,881 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று ரூ.109 கோடி மதிப்பீட்டில் 8 போக்குவரத்து கழகங்களுக்கு 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை சென்னையில் முதல்வர் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 65 பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 30 பேருந்துகள், கோவை -104, சேலம் -57, கும்பகோணம் -41, விழுப்புரம் -27, நெல்லை 26, மதுரை -20 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!