15 நாட்களில் 3550 சமூக விரோதிகள் கைது... மேற்குமண்ட ஐஜி தகவல்..

Published : Jun 22, 2021, 06:18 PM IST
15 நாட்களில் 3550 சமூக விரோதிகள் கைது... மேற்குமண்ட ஐஜி தகவல்..

சுருக்கம்

33 கஞ்சா வழக்குகளில் 43 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 56 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 167 சூதாட்டம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 806 நபர்கள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 4 லட்சத்து 78 ஆயிரத்து 790 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.  

மேற்கு மண்டலத்தில் 15 நாட்களில் 300 ஆயிரத்து 550 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐஜி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முழு விவரம் பின்வருமாறு:-  

கோயமுத்தூர் சரகம் மற்றும் சேலம் சரகத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் 1-6-2021 முதல் 15-6-2021 வரையிலான பதினைந்து நாட்களில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட கண்காணிப்பாளர்கள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மதுபானம் மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டோர் கஞ்சா போதைப்பொருள் லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் மீது 1959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

3, 550 நபர்கள் கைது செய்யப்பட்டனர், இதில் 1740 மதுவிலக்கு வழக்குகளில், 7508 லிட்டர் சாராயம்,  19 ஆயிரத்து 451 லிட்டர் ஊழல் 2,547 லிட்டர் 'கள்'  மற்றும் இரண்டு லட்சத்தி 12,498 லிட்டர் பிராந்தி ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன,33 கஞ்சா வழக்குகளில் 43 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 56 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 167 சூதாட்டம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 806 நபர்கள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 4 லட்சத்து 78 ஆயிரத்து 790 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி மொத்த வழக்குகளில் 110 நான்கு சக்கர வாகனங்களும், 455 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!