மூணுல ஒன்ணு வைகோவுக்கு …. மற்ற ரெண்டும் யார் யாருக்கு தெரியுமா ? ஸ்டாலின் அதிரடி முடிவு !!

By Selvanayagam PFirst Published Jun 24, 2019, 11:38 AM IST
Highlights

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுவுக்கு 3 உறுப்பினர்கள்  கிடைக்க உள்ள நிலையில் ஒன்று ஒப்பந்தப்படி வைகோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு எம்.பி. பதவிகள்  யார் யாருக்கு என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜுலை மாதம் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை 3 உறுப்பினர்கள் திமுகவுக்கும், 3 உறுப்பினர்கள் அதிமுகவுக்கும் கிடைக்க உள்ளது. பெரும்பாலும் இந்த பதவிகள் தேர்தல் நடத்தாமல் முடிவு செய்யப்படும் நிலையே உள்ளது.

அதிமுக – பாமக  ஒப்பந்தப்படி ஒரு எம்.பி. பதவி அன்புமணிக்க்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை அதிமுக ஒதுக்குமா ? என கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் எம்.பி.பதவிகளுக்கு அதிமுகவிவிலேயே கடும் போட்டி நிலவுகிறது.

இதே போல் திமுகவுக்கு கிடைக்க உள்ள 3 எம்.பி.க்களில் ஒன்று  மதிமுக பொதுச் செயலாளர்  வைகோவுக்கு என்பது உறுதியாகியுள்ளது. மற்ற இரண்டு எம்.பிக்கள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளது என்பதை ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எம்.பி. பதவி காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு திமுக சார்பில் தமிழகத்தில் இருந்து பதவி கிடைக்குமா ? என சோனியா காந்தி முயற்சி செய்தார். ஆனால் அவர்களுக்கு ஸ்டாலின் நோ சொல்லிவிட்டார்.

இதே போல் தற்போது எம்.பி. பதவி முடிவடையும் நிலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாள்ர் டி.ராஜாவுக்கு எம்.பி. பதவி கிடைக்குமா ?  என அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி அண்மையில் ஸ்டாலினை சந்தித்து முட்டி மோதியுள்ளார். அவர்களுக்கு ஈவு இரக்கமின்றி நோ சொன்ன ஸ்டாலின் மீதமுள்ள இரண்டு எம்.பி.பதவிகளும்   திமுகவினருக்குத் தான் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

இந்நிலையில்தான் கிறிஸ்துவ பாதிரியார்கள், ஆயர்கள் அடங்கிய குழுவினர் திடீரென ஸ்டாலினை சந்தித்து மூன்று ராஜ்யசபா சீட்டுகளில் ஒரு சீட்டை நீங்க கிறிஸ்துவ மதத்தினருக்குக் கொடுக்கணும். என வலியுறுத்தியுள்ளனர். 

ஆனால் சீட் திமுகவினருக்குத் தான் என்று ஸ்டாலின் உறுதி செய்ததையடுத்து , கருணாநிதி  நினைவிட வழக்கில் நீதிமன்றத்துல திறமையா வாதாடி, மிகப்பெரிய வெற்றிய தேடிக் கொடுத்த வில்சனுக்கு கொடுக்க வேண்டும் என கிருஸ்துவ அமைப்புகள் அடுத்த கோரிக்கையை வைத்துள்ளன.

ஸ்டாலின் ராஜ்யசபாவுக்கு யார் யார் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார். அதன்படி இரண்டு இடங்களில் ஒன்றை திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகத்துக்கு என்று முடிவு செய்துவிட்டார். 

click me!