பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் சிக்கிய 3கோடி.!!

Published : May 30, 2020, 07:13 PM IST
பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் சிக்கிய 3கோடி.!!

சுருக்கம்

இந்த நிலையில் 2 பைகளில் பல்வேறு நாடுகளின் பணக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய மதிப்பு ரூ.3 கோடி பணம் இருந்தது.

நாடுமுழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு தளர்வுகள் தளர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் கடந்த 22-ந்தேதி லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்ற விமானம் தரை இறங்க முயன்ற போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.மேலும், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை பைலட் மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், விமானத்தின் இடிபாடுகளில் இருந்த உடைமைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 2 பைகளில் பல்வேறு நாடுகளின் பணக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய மதிப்பு ரூ.3 கோடி பணம் இருந்தது. இந்த பணம் யாருடையது என்றும் விமான நிலைய சோதனையை மீறி பெரிய தொகை எப்படி விமானத்தில் கொண்டு வரப்பட்டது என்றும் உளவுத்துறை  விசாரணை நடக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!