3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்... உச்சநீதிமன்றத்தில் 28-ம் தேதி விசாரணை..!

By vinoth kumarFirst Published Mar 25, 2019, 11:27 AM IST
Highlights

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மார்ச் 28-ம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மார்ச் 28-ம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றிற்கான இடைத்தேர்தல் தற்போது நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கை மார்ச் 28-ம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த முடியுமா என தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கருத்து கேட்க வாய்ப்புள்ளது. பிறகு தேர்தல் ஆணையத்திற்கு உடனே 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடவும் வாய்ப்புள்ளது.

click me!