கரூரில் 2வது விக்கெட்டும் காலி...! டி.டி.வி கட்சி பொறுப்பாளரையும் திமுகவில் சேர்த்து செந்தில் பாலாஜி அதிரடி..!

Published : Feb 09, 2019, 02:33 PM IST
கரூரில் 2வது விக்கெட்டும் காலி...! டி.டி.வி கட்சி பொறுப்பாளரையும் திமுகவில் சேர்த்து செந்தில் பாலாஜி அதிரடி..!

சுருக்கம்

கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி விலகி திமுகவில் இணைந்த சில மாதங்களிலேயே டி.டி.வி.தினகரன் கட்சியை சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளரும் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளது அமமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   

கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி விலகி திமுகவில் இணைந்த சில மாதங்களிலேயே டி.டி.வி.தினகரன் கட்சியை சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளரும் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளது அமமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

டி.டி.வி.தினகரனின் வலது கரமாக கருதப்பட்ட செந்தி பாலாஜி அதிரடியாக விலகி திமுகவில் இணைந்தார். அடுத்து நடந்த திமுகவில் இணையும் விழாவை மாநாடு போல நடத்தி அசத்திக் காட்டிய செந்தில் பாலாஜி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோரை திமுகவில் இணைத்து அசால்ட் காட்டினார். இதனை அடுத்து கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் மேலும் உற்சாகமான செந்தில் பாலாஜி அமமுக மற்றும் பிற கட்சிகளில் இருந்து முக்கிய புள்ளிகளை திமுகவிற்கு அழைத்து வர காய் நகர்த்தி வருகிறார். 

இதனால் வெறுப்பான டி.டி.வி.தினகரன், அமமுகவினரை இழுத்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு திருவாரூர் இடைத்தேர்தலில் வென்று அடி கொடுப்போம் என கூறினார். இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதால் தோல்வி பயத்தில் ஸ்டாலின் பின் வாங்கி விட்டதாகக் கூறினார். இது திமுகவினரை சூடேற்ற, கரூர் மாவட்ட அமமுகவில் இருந்து அடுத்த விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் செந்தில் பாலாஜி.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த  அமமுக மாவட்ட பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் இன்று திமுகவில் இணைந்தார். சேலத்தில் நடந்த இந்த நிகழ்வின் போது கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியும் உடனிருந்தார். டி.டி.வி அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வீழ்த்தி திமுகவுக்கு இழுத்து வர செந்தில் பாலாஜி முயன்று வருவதால் அடுத்தடுத்த விக்கெட்டுகள் காலியாகலாம் என கூறப்படுகிறது. இதனால், டி.டி.வி.தினகரன் கூடாராம் கலக்கத்தில் உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?