2ஜி மேல்முறையீடு வழக்கு... டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. சிக்கலில் ஆ.ராஜா, கனிமொழி..!

By vinoth kumarFirst Published Sep 29, 2020, 4:39 PM IST
Highlights

அக்டோபர் 5ம் தேதி முதல் தினமும் 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அக்டோபர் 5ம் தேதி முதல் தினமும் 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

2ஜி அலைக்கற்றை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அமலாக்கப் பிரிவும், 20-ம் தேதி சிபிஐ அமைப்பும் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கின் விசாரணையைக் கவனித்து வரும் டெல்லி உயர்நீதிமன்ற பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுகிறார்.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தைக் கடந்த ஜனவரி 15-ம் தேதி முடித்துக்கொண்டது. ஆனால், அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கின் விசாரணை நடக்கவில்லை. இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுவதால், அதற்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றினால் இன்னும் தாமதமாகலாம் எனக் கூறி சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இது தொடர்பாக ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி சிபிஐ, அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

click me!