2ஜி வழக்கில் நீதிபதியை மாற்றி அதிரடி... கனிமொழி, ஆ.ராசாவை கதிகலங்க வைக்கும் பாஜக..!

By vinoth kumarFirst Published Sep 17, 2019, 1:46 PM IST
Highlights

2ஜி மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இடமிருந்து, ஐஎன்எஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அஜய்குமார் குஹார் அமர்விற்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கை ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். 

இந்நிலையில், தங்களை கைது செய்வதற்கு தடை விதிக்க ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தியும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவருக்கும் முன்ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையும் மீறி நீதிபதி சைனி ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய அதிரடியாக தடை விதித்து முன்ஜாமீன் வழங்கினார். 

இந்நிலையில், நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்த முக்கிய வழக்குகளான 2ஜி மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளை நீதிபதி அஜய்குமார் குஹர் அமர்வுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, திகார் சிறையில் அனுப்பியதற்கு நீதிபதி அஜய்குமார் முக்கிய பங்காற்றியவர். 

திமுக சமீபகாலமாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவர்களுக்கு கடிவாளம் போடவே இந்த வழக்கை நீதிபதி அஜய்குமாருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த மாதத்துடன் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி ஓய்வு பெறுவதால் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

click me!