இந்தியாவை ஏமாற்றி தப்லீக் ஜமாத் கூட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி! சுற்றி வளைத்த ஜார்க்கண்ட் போலீஸ்

By Thiraviaraj RMFirst Published Apr 11, 2020, 10:16 PM IST
Highlights

டெல்லியில் நடந்த மதக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றியும்,எவ்வளவு பேர்  கலந்துகொண்டார்கள் என்கிற விபரம் உளவுத்துறைக்கோ,டெல்லி போலீஸ்க்கோ தெரியாத அளவிற்கு ரகசியமாக அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற ரகசியத்தை வெளியிட்டிருக்கிறது ஜார்க்கண்ட் போலீஸ்.

T.Balamurukan

டெல்லியில் நடந்த மதக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றியும்,எவ்வளவு பேர் கலந்துகொண்டார்கள் என்கிற விபரம் உளவுத்துறைக்கோ,டெல்லி போலீஸ்க்கோ தெரியாத அளவிற்கு ரகசியமாக அந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற ரகசியத்தை வெளியிட்டிருக்கிறது ஜார்க்கண்ட் போலீஸ்.

மதுரையில் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்து போனார். அவர் தாய்லாந்தில் இருந்து வந்திருந்த மதகுருமார்களுக்கு உதவியாக இருந்தவர் என்று தெரிய வந்தது.அதன் பிறகுதான் தமிழக போலீஸ் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பற்றிய தகவலை வெளியிட்டது.அதன் பிறகே டெல்லி போலீஸ் நிஜாமுதீன் பள்ளியில் தங்கியிருந்தவர்களை சோதனை நடத்தியது.அந்த அளவிற்கு இந்திய உளவுத்துறை குரட்டை விட்டுக்கொண்டிருந்தது.தமிழக போலீஸ் மட்டும் இதை கண்டுபிடிக்காமல் இருந்தால் கொரோனா பாதிப்பு,பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சமீபத்தில், மலேசியாவிற்கு டெல்லியில் இருந்து செல்ல இருந்த விமானத்தில் ,டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் 8பேர் தப்பிக்க முயன்ற போது பிடிபட்டார்கள்.இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் அரசாங்கத்திடம் எதற்காக இந்தியா வருகிறோம் என்று உண்மையான தகவலை தெரிவிக்காமல், உண்மையை மறைத்து சுற்றுலாவிசாவில் வந்திருக்கிறார்கள்,என்கிற தகவலை மத்தியஉளவுத்துறை அந்தந்த மாநில காவல்துறைக்கு அனுப்பி இருக்கிறது.

அதன் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 28 வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியா வந்தற்கான விசாக்களை ஆய்வு செய்த போது தான் போலீஸ்க்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் எல்லாம் சுற்றுலா விசா வாங்கிக் கொண்டு டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஜார்க்கண்ட் போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது.
இதுகுறித்து ஜார்க்கண்ட் டிஜிபி எம்.வி.ராவ் பேசும் போது..,


" சுற்றுலா விசாக்களில் வந்து டெல்லி நிஜாமுதீனில் நடந்த மத கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.மாநிலத்தில் உள்ள 28 வெளிநாட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வரும்போது அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து மத பிரசங்கத்தில் ஈடுபட்டுள்ளனர்." என்று அவர் கூறினார்.
கொரோனா பிரச்சனை இந்தியாவில் தலைதூக்காவிட்டல் இந்திய குடியுரிமைச் சட்டம் போராட்டம் இந்தியாவில் பேராபத்தை விளைவித்திருக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாக அமைந்துள்ளது.


 

click me!