27 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... இறையன்பு அதிரடி உத்தரவு..!

Published : Jun 09, 2021, 06:39 PM IST
27 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... இறையன்பு அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

மதுரை, கோவை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.  

மதுரை, கோவை, சேலம், திருப்பூர், திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்வர் பொறுப்புக்கு வந்த பிறகு பல உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 100ற்கும் மேற்பட்ட ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 25 ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 5 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை, நெல்லை, திருப்பூர், சேலம் , கோவை மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி கார்த்திகேயன் நியமனம். சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ். சென்னை மாநகராட்சியின் (கல்வி) துணை ஆணையராக டி.சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ்,
திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன், கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!