வியக்க வைக்கும் வகையில் 240 புதிய அரசு பேருந்துகள்... பட்டையை கிளப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

By vinoth kumarFirst Published Jan 29, 2020, 3:08 PM IST
Highlights

சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான நிதி ஒதுக்கீடும் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு இருந்தது. 

84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான நிதி ஒதுக்கீடும் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், இதனடிப்படையில் வாங்கப்பட்ட 240 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரம் 25, சேலம் 10,  கோவை 20, கும்பகோணம் 35, மதுரை 5, திருநெல்வேலி 5 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.83 கோடியே 83 லட்சம் ஆகும்.

மேலும், மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறை சார்பில் முதற்கட்டமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

click me!